சுவிஸ் செய்திகள்

ஆஸ்லோ: தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் முக்கிய நடவடிக்கையான நாடு கடந்த தமிழீழ அரசு ஜெனீவா நகரில் நிறுவப்படவுள்ளது. சர்வதேச நகர் என்பதால் ஜெனீவாவில் தமிழீழ அரசை நிறுவ புலிகள் அமைப்பு தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியர்களின் ரூ.70 லட்சம் கோடி கறுப்பு பணம் சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. இதுகுறித்து எந்த உண்மையுமே எங்களுக்குத் தெரியாது என சுவிஸ் வங்கி மற்றும் அதன் தொடர்பில் உள்ள வங்கிகள் அறிவித்துள்ளன.

ஐக்கியராட்சிய செய்திகள்

போரினால் இடம்பெயர்ந்த மக்களில் 11,000 பேர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என இனங்காணப்பட்டு தனியான முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், இவ்வாறு இவர்கள் இனங்காணப்பட்ட முறை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை என பிரித்தானியா கவலை தெரிவித்திருக்கின்றது.

சிறிலங்கா அரசின் நியாயமற்ற ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைக்கு எதிராக உதவி வழங்கும் நாடுகளும் உதவி அமைப்புக்களும் ஓரே அணியில் திரண்டு நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என பிரித்தானியாவின் புகழ்மிக்கதும் செல்வாக்குமிக்கதுமான நாளேடான 'த கார்டியன்' தெரிவித்துள்ளது.

கனடிய செய்திகள்

இலங்கையின் தற்போதைய மனிதாபிமான நிலவரத்தை கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிவரவு நடவடிக்கையை கனடா தற்போது துரிதப்படுத்த தொடங்கியிருக்கின்றது. அனுசரணை வழங்குபவர்கள் திணைக்களத்துக்கு அறிவித்தால் கனடிய குடிவரவு குடியுரிமை திணைக்களம் தற்போதுள்ள குடும்ப மட்ட விண்ணப்பங்களை துரிதப்படுத்தும்.

வானூர்தி நிலையத்தில் பொப் றே தடுத்துவைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு நாம் எமது அதிருப்திகளை தெரிவித்துக் கொள்கின்றோம். கனடா நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரை சிறிலங்கா அரசாங்கம் நடத்திய விதம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று - கனடாவின் வெளிவிவகாரத்துறையின் பேச்சாளர் எமா வெல்போட்

பிரஞ்சு செய்திகள்

கோமோரோஸ் தலைநகர் மரோனியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் துணை அதிபர், விமானம் விபத்துக்குள்ளான பகுதியை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மிட்சமியோலி பகுதியில் விமானம் விழுந்திருக்கலாம் எனக் கணித்துள்ளோம்.

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதிக்கு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முன்னேறினார். பெண்கள் பிரிவில் ரஷ்யாவின் கஸ்னெட்சோவா, அமெரிக்காவின் செரினா வில்லியம்சை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

ஜேர்மன் செய்திகள்

தமிழ் மக்கள் சந்தித்து வரும் மாபெரும் அவலநிலையை வெளியுலகத்துக்கு கொண்டு வரவும், சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான இனப் படுகொலையைக் கண்டித்தும் பேர்லின் மாநிலத்தில் திடீர் போராட்டம்.

கிரி மற்றும் ராகுல் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட பட்டினிப்போராட்டம் இன்றுடன் பதின்மூன்றாவது நாளை நிறைவுசெய்கிறது, இன்று காலை முதல் மக்கள் பலர் ராகுல் மற்றும் கிரி ஆகியோருடன் உரையாடிக்கொண்டிருந்தனர், மாலை கடுமையான மழை பெய்துகொண்டிருந்த போதும் மக்கள் திரண்டுவந்து கவனயீர்ப்பில் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் நடைபெறும் உலகக் கோப்பை ஆடவர் ஜுனியர் ஹாக்கி போட்டிகளில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்தியா, பெல்ஜியத்தை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் இந்தியா இடம்பெற்றுள்ள பிரிவில் ஆறு புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை தொடக்கம் நடத்திய அகோர எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 140 பேர் காயமடைந்துள்ளனர்.

வீடீயோ செய்திகள்
Last posted Videos
SunNews Tamil
Tamilnews - 11/17/2009
SunNews Tamil
Suntv-News - 11/13/2009
SunNews Tamil
TamilTv news - 11/12/2009
SunNews Tamil
EveningNews - 11/11/2009

More Video News >>


சிறப்புச் செய்திகள்

மாநிலம் வதோதராவில் இன்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் மிகக் கடுமையாகப் போராடிய இந்தியா வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் மயிரிழையில் தோல்வியைத் தழுவியது.

ஹுவா ஹின்: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான புகார்கள் உண்மை இல்லை. ஜனநாயக நாட்டில் புகார்கள், குற்றச்சாட்டுக்கள் எழுவது சகஜம்தான். ஆனால், அவை உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ஜெர்மனியில் நடைபெற்ற 8-வது தமிழ் இணையதள மாநாட்டில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக பங்கேற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்தகிருஷ்ணன் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளும் ஒத்துழைப்பது என்று இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இத் தகவலை பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். தென் கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பின் (ஆசியான்) 15-வது உச்சி மாநாடு தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

ரூ. 1,360.52 கோடி மதிப்பிலான 26 நேரடி வெளிநாட்டு முதலீடுளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும் ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட 14 நிறுவனங்களின் திட்டங்கள் மீதான முடிவு ஒத்திவைக்கப்பட்டது. நான்கு திட்டங்கள் நிராகரிக்கப்பட்டன. இதில் பைசெல் டெலி கம்யூனிகேஷன் நிறுவனமும் ஒன்று.

Search
:

© The Service rights to www.tamilr.com