பிரதான செய்திகள்

கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தமிழ் பேரறிஞர்கள் வந்து விடாமல் தடுக்க முயற்சி நடைபெறுகிறது என்று முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

பல கோடி ரூபாய் போலி முத்திரைத் தாள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தெலகியின் லேப்டாப் கம்ப்யூட்டரில் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணின் பெயரும் இடம் பெற்றுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

2009-ம் ஆண்டு மே 19-ம் தேதி விடுதலைப் புலிகளை முற்றிலுமாக முறியடித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. போரின் இறுதி மூன்று நாள்களில் ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள்.

ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் விதிகள் ஏதும் மீறப்படவில்லை. இந்த விவகாரத்தில் ஜெயலலிதா, பாஜகவிடம் இருந்து நான் சர்டிபிகேட்டை எதிர்பார்க்கவில்லை என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா கூறினார்.

சில வாரங்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் இருந்து பெட்ரோல், டீசல் விலை பெட்ரோல் லிட்டருக்கு 7 காசும், டீசல் லிட்டருக்கு 4 காசுமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

இலங்கைத் தமிழர்களின் தனி ஈழப் போராட்டம் தொடரும். அவர்களுக்கு தனி நாடு கிடைத்தே தீரும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸில் இன்று 410 புள்ளிகள் வரை குறைந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சநதித்தார்கள். கடந்த வாரம் பங்குச் சந்தை தொடர்ந்து சரிவுக்குள்ளானதால் கிட்டத்தட்ட ரூ 66000 கோடி வரை பெரிய நிறுவனங்களின் பங்குகள் இழப்பைச் சந்தித்தன.

கொழும்பு: இலங்கை வட பகுதியில் அரசு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களில் 90 ஆயிரம் பேர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் இதனை தமிழர் அமைப்புகள் உறுதிப்படுத்த மறுக்கின்றன.

ஒரிஸ்ஸாவுக்குச் சென்று கொண்டிருந்த டெல்லி-புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய நக்ஸல்களும், அவர்களது ஆதரவாளர்களான பழங்குடியினரும் ரயிலை 5 மணி நேரத்துக்குப் பின் விடுவித்தனர்.

சென்னை: திருத்துறைப்பூண்டி கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள பழைமையான மரகதலிங்கம் மீட்கப்பட்டது. இதை விற்க முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் மாவட்டமான குமரியில் தொடங்கி, தலைநகர் சென்னை வரை எங்கு பார்த்தாலும் சிக்குன் குனியா நோயாளிகள் மருத்துமனைகளில் வரிசையில் நிற்கின்றனர். மாவட்ட அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இந்த நோய் தாக்கப்பட்டதால் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறையே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்திக்கின்றனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், தலித்- பழங்குடி மக்களின் உரிமைப் பேரணி மற்றும் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்கள் விடுவிக்கப்பட்டு வருவதாக அதிபர் ராஜபட்ச பொய்யானத் தகவல்களைக் கூறிவருகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் தா.பாண்டியன் குற்றஞ்சாட்டினார்.

விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக விளங்கி வந்த கிளிநொச்சியில் விரைவில் மீண்டும் தமிழர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அரசு அதிகாரி எமல்டா சுகுமார் தெரிவித்தார்.

மும்பையில் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியின்போது ஓவராக சத்தம் போட்டு ஆட்டம் ஆடியும், பாட்டு பாடியும், மது அருந்தியும் பெரும் அமளியாகி விட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விரைந்து வந்து அமர்க்களம் செய்த நடிகர், நடிகைகளை கடுமையாக எச்சரித்தனர். இதனால் விருந்து பாதியில் நின்றது.

ஆந்திராவில் நடந்த கண் சிகிச்சை முகாமின்போது காடராக்ட் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பலருக்கு பார்வை பறிபோனதற்கு டாக்டர்களை குறை சொல்ல முடியாது. பொதுவாக கண் அறுவை சிகிச்சையின்போது நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதே இந்த சிக்கலுக்குக் காரணம் என்று பிரபல சங்கர நேத்ராலயா மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வானில் அற்புதக் காட்சியை செவ்வாய்க்கிழமை மாலை கண்டு மகிழலாம். வியாழன் கிரகமும், நிலவும் பூமிக்கு மிக அருகில் வருவதால் வெறும் கண்களால் இதைக் கண்டு ரசிக்க முடியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 12 பேர் இந்தியாவுக்குள் ஊடுறுவியுள்ளனராம். இவர்கள் 3 குழுக்களாகப் பிரிந்த ஆந்திர காடுகளுக்குள் புகுந்துள்ளனராம். மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளுக்கு இவர்கள் பயிற்சி அளிக்கின்றனராம். இந்திய உளவுப் பிரிவு இந்தத் தகவலை கூறியுள்ளது.

மாநிலம் வதோதராவில் இன்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் மிகக் கடுமையாகப் போராடிய இந்தியா வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் மயிரிழையில் தோல்வியைத் தழுவியது.

ஹுவா ஹின்: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான புகார்கள் உண்மை இல்லை. ஜனநாயக நாட்டில் புகார்கள், குற்றச்சாட்டுக்கள் எழுவது சகஜம்தான். ஆனால், அவை உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

கட்சி சார்பற்ற 2-வது எம்.எல்.ஏ. ராஜா: ஏற்கெனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.வி.சேகர் பேரவையில் எந்த அணி என அறிவிக்க வேண்டியுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட காரணத்தால் அவர் எக்கட்சியும் சாராத உறுப்பினராக கருதப்படுவார் என பேரவை வட்டாரங்கள் கூறுகின்றன.

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் மற்றும் அவரது மனைவி வினோதினி ஆகியோருக்குச் சொந்தமாக சென்னையில் உள்ள ஒரு பல அடுக்குமாடிக் கட்டடம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதும், பத்திரப் பதிவின்போது தீர்வையைக் குறைத்துக் காட்டியும் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் புதிய புகார் கிளம்பியுள்ளது.

சென்னை: கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தமிழக அரசு எங்களுக்கு அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வோம் என்று இலங்கை அமைச்சர் முத்துசிவலிங்கம் கூறியுள்ளார்.

பகுத்தறிவுவாதி என கூறிக் கொள்ளும் கருணாநிதி, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், எமதர்மர் உயிரைப் பறிப்பது போலவும், அதை இவர் தடுப்பது போலவும் சித்திரித்துள்ளார்.

ஜெர்மனியில் நடைபெற்ற 8-வது தமிழ் இணையதள மாநாட்டில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக பங்கேற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்தகிருஷ்ணன் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு தனியார் விமானம் கொழும்பு புறப்பட தயாராக இருந்தது. இதையடுத்து பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் ஏறி இருக்கையில் அமர்ந்தனர்.

இலங்கையில் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களில் வாழவே முடியாத சூழல் உள்ளதாக, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். பெண்களுக்கான அரசியல் பயிலரங்க நிறைவு விழா உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கனிமொழி, செய்தியாளர்களிடம் கூறியது:
Result Pages  1  2  3  4  5 

வீடீயோ செய்திகள்
Last posted Videos
SunNews Tamil
Tamilnews - 11/17/2009
SunNews Tamil
Suntv-News - 11/13/2009
SunNews Tamil
TamilTv news - 11/12/2009
SunNews Tamil
EveningNews - 11/11/2009

More Video News >>


சிறப்புச் செய்திகள்

Search
:

© The Service rights to www.tamilr.com