பிரதான செய்திகள்

கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தமிழ் பேரறிஞர்கள் வந்து விடாமல் தடுக்க முயற்சி நடைபெறுகிறது என்று முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

பல கோடி ரூபாய் போலி முத்திரைத் தாள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தெலகியின் லேப்டாப் கம்ப்யூட்டரில் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணின் பெயரும் இடம் பெற்றுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

தொலைத்தொடர்புத் துறையில் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கடைப்பிடிக்கப்பட்ட உரிமம் வழங்கு நடைமுறை காரணமாக அரசுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது; நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த ஊழல்களிலேயே பண அளவில் இதுதான் மிகப்பெரியது என்று கருதப்படுகிறது.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை சீர்குலைப்பதற்காக தலிபான் தீவிரவாதிகளுக்கு சிலர் நிதியுதவி அளித்து வருகின்றனர். அதில் இந்தியாவும் ஒன்று என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏனைய செய்திகள்

2009-ம் ஆண்டு மே 19-ம் தேதி விடுதலைப் புலிகளை முற்றிலுமாக முறியடித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. போரின் இறுதி மூன்று நாள்களில் ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள்.

ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் விதிகள் ஏதும் மீறப்படவில்லை. இந்த விவகாரத்தில் ஜெயலலிதா, பாஜகவிடம் இருந்து நான் சர்டிபிகேட்டை எதிர்பார்க்கவில்லை என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா கூறினார்.

சில வாரங்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் இருந்து பெட்ரோல், டீசல் விலை பெட்ரோல் லிட்டருக்கு 7 காசும், டீசல் லிட்டருக்கு 4 காசுமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

இலங்கைத் தமிழர்களின் தனி ஈழப் போராட்டம் தொடரும். அவர்களுக்கு தனி நாடு கிடைத்தே தீரும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸில் இன்று 410 புள்ளிகள் வரை குறைந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சநதித்தார்கள். கடந்த வாரம் பங்குச் சந்தை தொடர்ந்து சரிவுக்குள்ளானதால் கிட்டத்தட்ட ரூ 66000 கோடி வரை பெரிய நிறுவனங்களின் பங்குகள் இழப்பைச் சந்தித்தன.

கொழும்பு: இலங்கை வட பகுதியில் அரசு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களில் 90 ஆயிரம் பேர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் இதனை தமிழர் அமைப்புகள் உறுதிப்படுத்த மறுக்கின்றன.

ஒரிஸ்ஸாவுக்குச் சென்று கொண்டிருந்த டெல்லி-புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய நக்ஸல்களும், அவர்களது ஆதரவாளர்களான பழங்குடியினரும் ரயிலை 5 மணி நேரத்துக்குப் பின் விடுவித்தனர்.

சென்னை: திருத்துறைப்பூண்டி கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள பழைமையான மரகதலிங்கம் மீட்கப்பட்டது. இதை விற்க முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் மாவட்டமான குமரியில் தொடங்கி, தலைநகர் சென்னை வரை எங்கு பார்த்தாலும் சிக்குன் குனியா நோயாளிகள் மருத்துமனைகளில் வரிசையில் நிற்கின்றனர். மாவட்ட அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இந்த நோய் தாக்கப்பட்டதால் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறையே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்திக்கின்றனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், தலித்- பழங்குடி மக்களின் உரிமைப் பேரணி மற்றும் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
Result Pages  1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13 

வீடீயோ செய்திகள்
Last posted Videos
SunNews Tamil
Tamilnews - 11/17/2009
SunNews Tamil
Suntv-News - 11/13/2009
SunNews Tamil
TamilTv news - 11/12/2009
SunNews Tamil
EveningNews - 11/11/2009

More Video News >>


சிறப்புச் செய்திகள்

Search
:

© The Service rights to www.tamilr.com